Monday, February 20, 2012

Thagaval Poonga

ஹரி ஓம் விஸ்வஸ்மை நமஹ
தகவல் பூங்கா
A Tamil Web Portal for information about Technology, Products, Services and Entertainment.
Read Little and Learn More

வருக! வருக!!

அன்புள்ள வாசகருக்கு வணக்கம். நீங்கள் மற்றும் உங்களது குடும்பத்தினர் நலமும் வளமும் பெற, மேலும் உங்களது தொழில் மற்றும் வர்த்தகம் சிறப்புடன் வளர்ச்சி பெற தகவல் பூங்காவின் இனிய நல்வாழ்த்துக்கள். பிள்ளையார்பட்டியில் இருந்து அனைவருக்கும் அருள்புரியும் அருள்மிகு "கற்பகவிநாயகர்" திருவடிகளில் இந்த முதல் தகவல் மடலை சமர்ப்பிக்கின்றோம்.

நவீன தொழில்நுட்பம் - நானோடெக்னாலஜி (NanoTechnology).

"நானோ" என்றால் மிகமிகச்சிறிய அல்லது நுண்ணிய என்று பொருள். நானோடெக்னாலஜி என்பது அணு வடிவில் உள்ள பொருட்கள் மற்றும் கருவிகளைப் பற்றிய தொழில்நுட்பம் ஆகும். இந்த நானோடெக்னாலஜி, 1 முதல் 100 நானோமீட்டர் (nanometer) அளவு உள்ள ஒரு பொருள் அல்லது கருவியை (machine) உருவாக்கப் பயன்படுகிறது.

சரி, நானோமீட்டர் என்றால் என்ன? ஒரு குண்டூசியின் முனை 1 மில்லிமீட்டர் ஆகும். 1 மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு பொருளை எடுத்து, அதனை 10 லட்சம் துண்டுகளாக வெட்டுங்கள். அதில் 1 துண்டின் அளவே, 1 நானோமீட்டர் ஆகும். அதாவது, ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில், 10 லட்சத்தில் ஒரு பங்கு ஆகும்.

1 millimeter = 10,00,000 nanometer.

மனிதனின் முடி (hair) 25,000 நானோமீட்டர் தடிமன் கொண்டதாகும். நானோடெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட கருவிகள் நமது முடியின் தடிமனை (hair thickness) விட 250 மடங்கு சிறியதாகும். இந்த கருவிகளை கண்ணால் காணமுடியாது. மேலும், microscope மூலமும் காணமுடியாது. நானோடெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட கருவிகள் எதற்காகப் பயன்படுகின்றன? இதனை அடுத்த மடலில் படிப்போம்.

 

வங்கிகள் வழங்கும் நவீன சேவைகள் - NEFT

நீங்கள் மிக வேகமாக இந்தியாவிற்குள் பணம் அனுப்ப நினைக்கிறீர்களா? அப்படியானால் NEFTயைப் பயன்படுத்தி பணம் அனுப்புங்கள்.

NEFT என்றால் என்ன? National Electronic Fund Transfer என்பதே NEFT ஆகும். அதாவது, "இந்தியா முழுவதும், மின்முறையில் பணம் அனுப்புதல்" - என்பது இதன் பொருள். இந்த NEFT சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய பெரும்பாலான கிளைகளில் வழங்குகின்றனர். இதுவே இதன் சிறப்பு அம்சம். இந்த NEFT முறையில் ஒரு ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப கட்டணம் ரூபாய் 5 மட்டுமே (Rs.5 only and Service Tax Extra). For above 1 lakh to 2 lakhs, the service charge is Rs. 15 only. For above 2 lakhs to 25 lakhs, the service charge is Rs. 25 only.

NEFT மூலம் இந்தியாவிற்குள் உள்ள எந்த ஒரு வங்கியிலிருந்தும், வேறு எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் பணம் அனுப்பலாம். இது எலெக்ட்ரானிக் முறையில் செயல்படுவதால், பணம் யாருக்கு அனுப்பப்படுகிறதோ, அந்த நபரின் கணக்கில் பணம் உடனடியாகச் சேர்ந்து விடுகிறது.

NEFT மூலம் பணம் அனுப்பும் பொழுது என்னென்ன விவரங்கள் எழுத வேண்டும்? அடுத்த மடலில் படிப்போம்.

ஏற்றுமதி செய்வது எப்படி?

நீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா? "ஆம்" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் IEC என்ற Code யைப் பெற வேண்டும். IEC என்றால் Importer Exporter Code என்று பொருள். இந்த IEC code இல்லாத எந்த ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தனி நபரோ இந்தியாவிலிருந்து ஏற்றுமதி/இறக்குமதி முடியாது.

அதாவது நாம் ஏற்றுமதி/இறக்குமதியைச் செய்வதற்கு இந்திய அரசு வழங்கும் உரிமம் (license) தான் IEC code ஆகும்.

இந்திய வாணிப அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் (Director General of Foreign Trade, Ministry of Commerce, Govt. of India) இதனை வழங்குகிறார். இந்த IEC codeயைப் எவ்வாறு பெறுவது? அடுத்த மடலில் படிப்போம்.

 

ஆங்கிலத்தில் வணிகக்கடிதங்கள்

ஆங்கிலத்தில் வணிகக்கடிதங்கள் எழுதுவது பற்றி இங்கு காண்போம். ஒரு நிறுவனம் தனது "சிறப்பு தள்ளுபடி விற்பனை" பற்றிய அறிவிப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறது. அதற்கு பின்வருமாறு ஆங்கிலத்தில் கடிதம் எழுதலாம்.

Sub : Announcement of Special Discount Offer.

Dear Sir,

This is to announce our 20% Special Discount Offer that we are making on all orders for the month of March only, for the following items :
1. Television
2. Mixee
3. Grinder

This 20% discount is available on any order set for delivery from 1.3.2012 through 31.3.2012. This discount is our way of saying thanks to you for being such a valued customer for our business. We hope you will take advantage of this offer and will send us your purchase order very soon. We will look forward to hearing from you.

Thaking you,

 

பங்குச்சந்தை - IPO என்றால் என்ன?

பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் Technical வார்த்தைகள் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். இந்த மடலில் IPO பற்றி படிப்போம்.

IPO என்றால் Initial Public Offering என்று பொருள். Initial - முதன்முதலாக, public - பொதுமக்களுக்கான, offering - பங்கு வெளியிடுதல். அதாவது ஒரு நிறுவனம் முதன்முதலாக தனது பங்குகளை பொதுமக்கள் வாங்குவதற்காக வெளியிடுகிறது. இதுவே IPO ஆகும்.

உதாரணமாக, "ராம் இண்டஸ்ட்ரி" என்ற கற்பனை நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இது ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனத்திற்க்கு தனது வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது உற்பத்தியை பெருக்க பணம் தேவைப்படுகிறது. இந்த பணத்தை, ராம் இண்டஸ்ட்ரி பொதுமக்களிடமிருந்து திரட்ட நினைக்கிறது. இதற்கான வழிதான் பங்குச்சந்தை ஆகும். இதுவரை பங்குச்சந்தையில் ஈடுபடாத ராம் இண்டஸ்ட்ரி பங்குச்சந்தையின் உள்ளே நுழைகிறது. தனது நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்கள் வாங்குவதற்காக பங்குச்சந்தையில் வெளியிடுகிறது. இதனையே IPO என்று அழைக்கின்றனர்.

 

புத்தகம் படியுங்கள்

புத்தகத்தின் பெயர் : BIZ WORLD: The Complete Business Awareness Guide

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் பற்றிய புத்தகம் இது. அந்த நிறுவனங்களின் வரலாறு, நிறுவனர் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களது வியாபாரம் பற்றி இந்நூல் சுவாரஸ்யமாக கூறுகிறது. இதில் airlines முதல் automobiles வரை பலவிதமான நிறுவனங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. போட்டித்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இந்நூல் உபயோகமாக இருக்கும்.

ஆசிரியர்கள் : Ravi Handa and Avinash Maurya
வெளியீடு : Alchemy Publishers.
வெளியிட்ட ஆண்டு : 2011
ISBN: 818046069X
சலுகை விலை : Rs. 105
பக்கங்கள் : 316
கிடைக்குமிடம் : www.flipkart.com

 

புதிய Top Level Domain Names

www.google.com - இது ஒரு website முகவரி என்பது நமக்குத் தெரியும். இதில் கடைசியில் உள்ள .com என்பது top level domain name (டொமைன் நேம்) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக .com, .org, .edu, .in, .us போன்ற top level domain nameகள் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவை. இதுபோல உலக அளவில் 23 வகையான top level domain கள் உள்ளன.

இந்த top level domain nameகளை உருவாக்கும் உரிமை அமெரிக்கவில் உள்ள ICANN என்ற நிறுவனத்திடம் உள்ளது. (ICANN - Internet Corporation for Assigned Names and Numbers). தற்பொழுது, "ஒருவர் தனது website முகவரியின் top level domain name யை தனது விருப்பப்படி வைத்துக்கொள்ளலாம்" - என்ற புதிய திட்டத்தை ICANN அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, இனிமேல் வங்கிகள் தனது website முகவரியின் இறுதியில் .bank என்று முடியுமாறு வைத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக SBI வங்கி தனது website முகவரியை www.sbi.com க்குப் பதிலாக www.sbi.bank என்று மாற்றிவைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்தால் .bsnl, .airtel, .tata, .shop போன்று முடியும் website முகவரிகளை நாம் இன்டர்நெட்டில் எதிர்காலத்தில் பயன்படுத்துவோம். ஆனால், இதற்கான கட்டணம் மிக அதிமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது எவ்வளவு? அடுத்த மடலில் படிப்போம்.

 

புதிய கண்டுபிடிப்பு - வேஸ்ட் பேப்பரிலிருந்து மின்சாரம்

சோனி (Sony) நிறுவனத்தின் ஆராச்சியாளர்கள் பயோ-பேட்டரி (Bio-Battery) என்ற புதிய வகை பேட்டரியை வடிவமைத்துள்ளனர். இந்த பேட்டரி பேப்பரைச் சாப்பிட்டு, ஜீரணித்து அதனை மின்சாரமாக மாற்றி விடுகிறது. இந்த பேட்டரி, ஒரு மணி நேரத்தில் 18 watt மின்சாரத்தை தருகிறது. அந்த மின்சாரத்தின் மூலம் ஒரு சிறிய மின்விசிறியை ஓடவிடலாம்.

சரி, இதன் தொழில்நுட்பம் என்ன? இந்த பேட்டரியின் உள்ளே "செல்லுலோஸ்" (Cellulose) என்ற என்சைம் (enzyme) உள்ளது. இந்த என்சைம் வேஸ்ட் பேப்பரை குளுக்கோஸ் (glucose) ஆக மாற்றிவிடும். இந்த குளுக்கோஸிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

 

தகவல்பூங்காவின் உறுப்பினராகச் சேர அன்புடன் அழைக்கின்றோம்

தகவல்பூங்கா உங்களை உறுப்பினராகச் சேர அன்புடன் அழைக்கிறது. Free Membership to all. ஒவ்வொருமாதமும் தகவல்பூங்காவின் NewsLetter உறுப்பினர்களின் e-mailக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த NewsLetterல் அடுத்த மடலில் வெளியிடப்படும் புதிய தகவல்கள் குறித்த செய்திகள் இடம் பெறும். உறுப்பினராகச் சேர SUBSCRIBE என்று type செய்து thagavalpark@gmail.com என்ற e-mail முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.

 

கடி ஜோக்ஸ்

(The given below information are only for joke or fun.)


இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா??


என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது

வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!
கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?
புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?
Thanks to www.twitter.com/tamiljokes

 

Edited and Published by SriHari Vidhya Bhavan, India.
The information here will be updated in every month.
To join as member, type SUBSCRIBE and send e-mail to thagavalpark@gmail.com
We publish advertisements as free. Send your advt.details to our email.
Send your suggestions, comments and advertisement to our E-mail: thagavalpark@gmail.com

உங்கள் வருகைக்கு நன்றி, மீண்டும் வருக


Free Domain Name Registration

2 comments: